Saturday, July 14, 2018

தன்னம்பிக்கை

     உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.


Friday, July 13, 2018

குறைகள்

குறைகளைக் குத்தி காட்டும் குதர்க்க மனிதராக இல்லாமல் குறைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் நல்ல மனிதராக இருக்க முயற்சிப்போம்!


Thursday, July 12, 2018

கனவுகள்

      எதிர்கால கனவுகள் என்னவென்று தெரியாத ஒவ்வொருவரும் இன்னமும்   உறங்கிக் கொண்டு தான்  இருக்கிறார்கள்!



Wednesday, July 11, 2018

வாழ்க்கை


     எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இது தான் பாதை! இது தான் பயணம்! என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம்  மாறி வரும், பயணம் முடிந்து விடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்! - கண்ணதாசன் வரிகள்

ஆறுதல்

    யாரோ ஒருவர் கஷ்டத்துல இருக்கும் போது இவர்கிட்ட பேசினா ஆறுதலா இருக்கும்னு நெனைப்பாங்கள்ள அந்த இவரா  இருக்க முயற்சி பண்ணுங்க - வாழ்க்கை அழகு!

Monday, July 9, 2018

ஆன்மா

      கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது!

Saturday, July 7, 2018

அன்பு

       வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்!

Friday, July 6, 2018

அழகான மனிதர்

எவருடைய சொல்லும் செயலும் பிறரை துன்புறுத்தாதோ அவரே உண்மையான மனிதர்!

Thursday, July 5, 2018

எண்ணம்

எண்ணம் ஒரு மலர்,    மொழி அதன்     மொட்டு,   செயல் அதன் பழுத்த கனி.

அழகு

அழகான  எண்ணம் உள்ளவர்கள் என்றும் அழகானவர்கள்